காமன்வெல்த் வாள் சண்டைப் போட்டி,நாமக்கல் மாணவி சாதனை.

லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் நாமக்கல் மாணவி ப பங்கேற்று வெண்கலப் பதக்கம் பெற்று சாதனைபுரிந்துள்ளார்.

கடந்த 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை லண்டனில் காமன்வெல்த் நாடுகளுக்கான வாள் சண்டை போட்டிகள் நடைபெற்றது. இதில் 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 8 நாடுகளை சேர்ந்த 32 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் 4 பேர் பங்கேற்றனர். இதில் நாமக்கல் அடுத்த பாப்பிநாயக்கன்பட்டி தனியார் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவி நிலா பங்கேற்று விளையாடினார். இப்போட்டியில் மாணவி நிலா வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார். பதக்கம் வென்று இன்று கல்லூரிக்கு வந்த மாணவிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு கல்லூரி முதல்வர் பொன்னாடை போர்த்தி, சந்தன மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகளும் நிலாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

      பதக்கம் வென்ற வீராங்கனை நிலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சாதரண குடும்பத்தில் பிறந்து இளம் வயதில் சர்வதேச போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்றது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும், தங்க பதக்கம் பெறவே முயற்சித்ததாகவும் ஆனால்,வெண்கலப் பதக்கம் மட்டுமே கிடைத்தாகவும், வரும் நாட்களில் தொடர்ந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு சர்வதேச போட்டிகளில் தங்கப் பதக்கம் பெறுவதே தனது லட்சியம் எனத் தெரிவித்தார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!