நாமக்கல் அருகே, இரு குழந்தைகளை கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட தந்தை.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்த காவக்காரன் பட்டியை சேர்ந்தவர் ராஜகோபால். வெங்காய வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி சசிகலா. 8 ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு வீரபத்ரன்(7) என்ற மகனும், விஜயா(4) என்ற மகளும் இருந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி சசிகலா உடல்நிலை குறைவால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து வீரபத்ரன் வேறு திருமணம் செய்து கொள்ளாமல் தனது குழந்தைகளை வளர்த்து வந்துள்ளார். இதற்கிடையே வீட்டின் அருகே உள்ள மரத்தில் மூன்று பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த எருமப்பட்டி போலீசார் சடலத்தை கைப்பற்றி 3 சடலங்களையும் பிரேத பரிசோதனைக்கு நாமக்கல் அரசு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மனைவி இறந்த துக்கத்தில் இருந்த ராஜகோபால் தனது இரு குழந்தைகளையும் முறையாக பராமரிப்பு செய்ய இயலாத நிலையில், தனது இரு குழந்தைகளையும் மரத்தில் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!