ராசிபுரம், மின்னல் தாக்கி வீடுகள், மின்சாதன கருவிகள் சேதம்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதிகளில்  இரவு பலத்த இடியுடன் கனமழை  பெய்தது.சுமார் 1 மணி நேரமாக பெய்த மழையில் ராசிபுரம் வி.நகர் பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் செல்வராஜ் என்பவரது வீட்டின் வாட்டர்டேங்க் மீது மின்னல் தாக்கியது. இதில் வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா. டிவி. யூபிஎஸ். உள்ளிட்ட  மின்சாதன பொருட்கள் கருகி சேதமடைந்தது. அதேபோல் அதேவீதியி உள்ள 10 க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்தது மின்னல் தாக்கி மின்சாதனங்கள் சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!