உதவித் தொகை பெறும் மாற்றுத் திறனாளிகள் பெயர் ரேசன் கார்டில் நீக்கம்-போராட்டம் நடத்த முடிவு.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் நாமக்கல் முதல் மாவட்ட  மாநாடு ராசிபுரத்தில் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது

சமூக நலத்துறை அமைச்சர் வசிக்கும் நாமக்கல் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் சமூக பாதுகாப்பு உதவித்தொகை பெறும் பயனாளிகளின் உதவித்தொகை காரணம் காட்டி  ரேசன்  கார்டில்  பெயர்களை நீக்குவது போன்ற பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர் இதனால்

மாற்றுத்திறனாளிகள் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது உதவி தொகை வழங்குவதை காரணம் காட்டி குடும்ப அட்டை மறுப்பது சட்டவிரோத செயலாகும் 

இந்த நடைமுறையக் தடுக்க கோரி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடத்திட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது 10 மாதமாகியும் நாமக்கல் மாவட்டத்தில் முறையாக மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடத்துவது இல்லை  இதனால் மாற்றுத்திறனாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்

மேற்குறிப்பிட்ட தீர்மானங்களை வலியுறுத்தி வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இம்மாநாட்டில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச்சங்கத்தின் தமிழ் மாநிலபொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன்  மாநில உதவித்தலைவர் எஸ்.நடராஜன்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ் கந்தசாமி ஜனநாயக மாதர் சங்கத்தலைவர் ராணி உட்பட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!