தொடர்ந்து சரியும் முட்டை விலை, கோழிப்பண்ணையாளர்கள் கவலை.

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலை ஒருமுட்டை 4 ரூபாய் 50 காசுகளில் இருந்து 30 காசுகள் குறைத்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

கடந்த 2-ம் தேதி 20 காசுகளும் இன்று 30 காசுகளும் என 3 நாட்களில் 50 காசுகள்  விலை குறைந்துள்ளது.  3 நாட்களில் 50 காசுகள் விலை குறைவு செய்யப்பட்டதால் கோழிப் பண்ணையாளர்கள் கவலையடைந்துள்ளனர். பிற மண்டலங்களில் முட்டை விலை சரிவடைந்து வரும் நிலையில் தமிழகத்திலும் முட்டை விற்பனை சரிவடைந்து தேக்கம் ஏற்பட்டுள்ளதும், கேரளாவில் ஓணம் பண்டிகை தொடங்குவதால் அம்மாநிலத்தில் முட்டை நுகர்வு குறைந்துள்ளதும் நாமக்கல் மண்டலத்தில் பெருமளவில் முட்டை தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து விலை சரிந்து வருவதாகவும், இதனால் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும்  கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!