சமூக வலைதளங்களில் கவனம் செலுத்துவதை விட மாணவிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் - அமைச்சர் அறிவுரை.

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அரசினர் பெண்கள் கலை கல்லூரியின் பொன் விழா ஆண்டை ஒட்டி சிறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பெரியார் பல்கலை கழக தேர்வில் சிறப்பிடம் மற்றும் விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது இன்றைய விஞ்ஞான உலகில் மாணவிகள் சமூக வலைதளங்களான வாட்ஸ் அப், பேஸ் புக் உள்ளிட்டவைகளில் அதிக கவனம் செலுத்துவதை கைவிட்டு, படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும், அத்தோடு பெண்கள் படித்து விட்டு உடனடியாக திருமணம் செய்து கொள்வதை விட பணியில் அமரந்தபின் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும் .

தற்பொழுது நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியின் தேர்ச்சி விகிதம் 80 சதவிகிதமாக உள்ளது இதனை 100 சதவிகிதாக உயர்த்திட கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவியர்கள் தங்கள் பங்களிப்பினை அளித்திடவேண்டும். தமிழக அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்திடும் வகையில் மோகனூர் சாலையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு தேர்வுகளில் வெற்றி பெற போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், இன்றைய தினம் நாமக்கல் நகர காவல்நிலையத்தில் சிறார்கள் மற்றும் போட்டித்தேர்வுகளுக்காக படிப்பவர்களுக்காக புதிய நூலகம் திறக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவியர்களாகிய நீங்கள் அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்திகொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!