ஈரோடு லாரி உரிமையாளர் தற்கொலை, கந்துவட்டி கும்பலை கைது செய்ய வேண்டும்-செல்ல.ராசாமணி வலியுறுத்தல்.

ஈரோட்டில் மணல் லாரி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி இன்று நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

      ஈரோடு மாவட்டம் சோலாரை சேர்ந்த மணல் லாரி உரிமையாளர் தட்சிணாமூர்த்தி ஜெகதீசன்,ஜவகர், சித்தேஸ்வரன், முருகேசன் என்பவருக்கு சொந்தமான லாரியை கந்து வட்டிக்கார்ர்களான ஜவகர், சித்தேஸ்வரன், முருகேசன் ஆகியோரிடம்  கடன் பெற்று தொழில் செய்துள்ளார்.இந்நிலையில் அவர் வட்டி செலுத்தவில்லை என கூறி அவரை மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டி லாரியை இந்தக் கும்பல் எடுத்து சென்றதாகவும், இதில் மனம் உடைந்த தட்சிணாமூர்த்தி மணல் லாரி அலுவலகம் அருகே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், இந்த வழக்கில் லாரியை எடுத்து சென்ற ஜெகதீசனை மட்டுமே போலீசார் கைது செய்துள்ளதாகவும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஜவகர், சித்தேஸ்வரன், முருகேசன் ஆகியோரை காவல்துறை கைது செய்யாமால் இருப்பதை கண்டிப்பதாகவும், எனவே உடனடியாக 3 பேரையும் கைது செய்ய வேண்டும், இல்லாவிட்டால் மணல் லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் சார்பில் ஈரோட்டில் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!