மத்திய மாநில அரசுகள் மக்கள் விரோத ஆட்சி செய்கின்றன- பாலபாரதி குற்றச்சாட்டு.

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ மோளிப்பள்ளி ராமசாமி நினைவு தினம் மற்றும் கட்சி நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் கே.எஸ்.வெங்கடாசலம் தலைமை வகித்தார்.கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் பி. சுரேஷ் வரவேற்றார்.கட்சியின் மாநில குழு உறுப்பினர் திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, நாமக்கல் மாவட்டசெயலாளர் எஸ் கந்தசாமி ,முன்னாள் மாவட்ட செயலாளர் ரங்கசாமி,மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே தங்கமணி,எலச்சிபாளையம் ஒன்றியசெயலாளர் எஸ். சுரேஷ் ,மாவட்ட குழு உறுப்பினர் எஸ் கோமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ கே.பாலபாரதி பேசியதாவது :- மத்தியில் ஆளும் பிஜேபி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஸ்டெர்லைட் ஆலை உட்பட பெரும் முதலாளிகளிடம் நன்கொடை பெற்றுக் கொண்டு அப்பாவி பொதுமக்கள் போராட்டம் நடத்தினால் துப்பாக்கி சூடு நடத்துவது கொலைவெறித் தாக்குதல் நடத்துவது போன்ற மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர் மிகவும் கண்டிக்கத்தக்கது

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி வருகிறது வேலை வேண்டும் என்று பல லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள் இவர்களை கேவலப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பக்கோடா விற்று சிக்கனமாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள் என்று வேலையில்லா இளைஞர்களை பார்த்து பேசி வருகிறார்

அரசு பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆசிரியர் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக வேலையும் வழங்க மறுக்கிறார்கள் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டு பணியில் அமர்த்தும் அவலநிலை தமிழகத்திலும் ஏற்படுகிறது

தலித் மக்கள் மீது தாக்குதல் எழுத்தாளரின் மீது தாக்குதல் தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவி அனிதா மரணம்.நீட் தேர்வில் 49 கேள்விகள் தவறாக இடம்பெற்றுள்ளது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கு தொடர்ந்து கேள்விகள் அனைத்தும் தவறு என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது இதை அமுலாக்காமல் 24,000 மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடி கொன்டு உள்ளனர்

அமைக்கும் பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டி கொண்டுள்ளது விவசாயிகள் நிலத்தில் தென்னை மரம் வாழை மரம் விவசாயக் கிணறுகளை சேதப்படுத்தி,விவசாயத்தை அழித்து 8 வழி சாலை அமைக்க வேண்டும் என்று கார்ப்பரேட் கம்பெனி ஜிண்டாலுக்கு ஆதரவாக செயல்பட்டு இயற்கை வளங்களை அழிப்பது என்ற நோக்கத்தோடு செயல்படுகின்றனர்

மாநில எடப்பாடி அரசு மேலும் உயர் மின் அழுத்த கோபுரம் அமைப்பது சேலத்தில் விமான நிலைய விரிவாக்க ஏற்பாடு செய்வது போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் விவசாயத்தையே குழிதோண்டி புதைப்பதற்கு பணிகளை செய்து வருகின்றனர்

தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் பொதுக்கூட்டம் போன்ற ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துவதை தடுக்கும் வகையில் ஏழை எளிய மக்கள் மீது பெரும் தாக்குதலை தமிழக அரசும் மத்திய அரசும் ஈடுபட்டு வருகின்றனர்

பல கிராமங்களில் இன்றைக்கும் பல்வேறு அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில் உள்ளாட்சித் தேர்தலையும் கிடப்பில் போட்டுள்ளனர் .கோவை மாவட்டத்தில் புதிய குடிநீர் திட்டம் என்ற முறையில் குடிநீர் விலைக்கு விற்கப்பட கூடிய ஒரு அவல நிலை ஏற்பட்டுள்ளது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பார்த்து உண்டியல் குலுக்கிகள் என்று பிஜேபி தம்பட்டம் அடித்துக் கொண்டு உள்ளது இந்தியாவில் கேரளா மாநிலத்தில் மக்கள் நலத்திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றதில் மூன்றாவது இடத்தை பிடித்து அனைத்துப் பகுதி மக்களின் அரசாக கேரள மாநில அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது

ஆகவே மத்தியில் ஆளும் மோடி அரசையும் மாநிலத்தை ஆளும் எடப்பாடி அரசுக்கும் வீழ்த்தக்கூடிய பணியினை நினைவுதின பொதுக்கூட்டத்தில் நாம் சூளுரைப்போம் என மாநில குழு உறுப்பினர் பாலபாரதி பேசினார்.

பொதுக் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி நிதியாக சி.சுந்தரம் தலைமையில் மக்கள் மத்தியில் வசூல் செய்த தொகையினை முதல் தவணையாக ரூ. ஐம்பதாயிரம் மாநில குழு உறுப்பினர் பாலபாரதி இடம் வழங்கப்பட்டது

இறுதியாக ஒன்றிய குழு உறுப்பினர் ஆர் குப்புசாமி நன்றி கூறினார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!