தனியார் பல் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை.

திருச்செங்கோடு தனியார் பல் மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் தொழிலதிபர். இவரது மனைவி பானு இவர்களுக்கு தாரணி(21), காவ்யலட்சுமி(16) என்ற இரு மகள்கள் இருந்தனர்.இதில் தாரணி திருச்செங்கோடு தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் 4 ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மதியம் தேர்வு எழுத வேண்டிய தாரணி உணவு சாப்பிட்ட பிறகு வகுப்பிற்கு செல்லாமல் விடுதி அறைக்குச் சென்றார். மற்ற மாணவிகள் வகுப்பிற்கு சென்றதால் அறையில் யாரும் இல்லை. அறைக் கதவை தாளிட்ட தாரணி அறை மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த திருச்செங்கோடு ரூரல் போலீசார் கல்லூரி விடுதிக்குச் சென்ற உஞ்சனை விஏஓ சக்திவேல் முன்னிலையில் விடுதி அறைக் கதவை உடைத்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் மாணவியின் அறியில் இருந்து மாணவி எழுதிய கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். குடும்ப விவகாரம் தொடர்பாக எழுந்த மன உளைச்சலில் மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனத் தெரிகிறது.இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!