தேசிய குடற்புழு நீக்க சிறப்பு முகாம்.

நாமக்கல் மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறை சார்பி;ல் வரும் 10-ம் தேதி தேசிய குடற்புழு நீக்கும் முகாம் நடக்கிறது. இதையொட்டி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்;டம் 06.08.2018 அன்று நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம், கூறியதாவது,

           1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மருந்து (அல்பெண்டசோல்) ஒரே நாளில் வழங்கப்படுகிறன்றது.  அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில்  இக்குடற்புழு நீக்க மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.

         நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1 வயது முதல் 19 வயதுவரை உள்ள 5இ84இ314 நபர்களுக்கு குடற்புழு நீக்கும் அல்பென்டசோல் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளது. அங்கன்வாடி மையங்கள் மற்றும்; பள்ளிகளில் உள்ள மாணவ மாணவிகள் அனைவருக்கும் இம்மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு குடற்புழுவால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு தடுக்கப்படும். அதனால்  குழந்தைகள்  ஆரோக்கியமாக நன்கு வளர முடியும். வைட்டமின்-ஏ மற்றும் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும்;. குறிப்பாக இரத்தசோகை குறைபாடு வராமல் தடுக்கப்படும். மேலும் குடற்புழு தாக்கத்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மாணவர்களின் பள்ளி வருகை பாதிப்பு தவிர்க்கப்படும். இதனால் மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவதோடு விளையாட்டு போன்ற இதர நடவடிக்கைகளிலும் அதிக ஊக்கம் மற்றும் புத்துணர்வுடன் பங்கேற்கலாம்;.

    குடற்புழு நீக்க மருந்து ஒரே நாளில் வழங்கப்படும் போது குறிப்பிட்ட வயதினர் அங்கன்வாடி மையம் (1 முதல் 5 வயது வரை) மற்றும் பள்ளிகளில் (6 முதல் 19 வயது வரை) அதிக அளவில் இருப்பதால் அனைவருக்கும் சென்றடைய ஏதுவாக அமைகிறது.

    அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகளுக்கு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மருந்து பள்ளிகளில் ஆசிரியர் வாயிலாக வழங்கப்படுகிறது.

    அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்யப்பட்ட குழந்தைகளுக்கும் மற்றும் பள்ளிகளுக்குச் செல்லாத பிள்ளைகளுக்கும் (1 முதல் 19 வயது வரை) குடற்புழு நீக்க மருந்து வயதிற்கேற்ப வழங்கப்படுகிறது.

    பள்ளி செல்லாத குழந்தைகளை ஆஷா பணியாளர் இருக்கும் பகுதிகளில் அவர்களின் மூலமாக விடுபட்டஃ பள்ளிகளுக்கு செல்லாத குழந்தைகளை அங்கன்வாடி மையங்களுக்கு அழைத்து வந்து குடற்புழு நீக்க மருந்து அங்கன்வாடி பணியாளர்களினால் வழங்க வைக்க வேண்டும்

    குடற்புழு நீக்க மருந்தினை உட்கொள்வதால், சுற்றுபுறத்தில் குடற்புழுவின் எண்ணிக்கை குறைகிறது. இதன் மூலம் சமுதாயத்தில் இருக்கும் மருந்து உட்கொள்ளாதவர்களுக்கும் இந்நோய் பாதிப்பு குறைகிறது.

      இந்த அல்பென்டசோல் குடற்புழுநீக்க மாத்திரை மற்றும் மருந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற இடங்களில் முற்றிலும் இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

     இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிசாமி, திட்ட அலுவலர் மாவட்ட ஊராட்சி வளர்ச்சி முகமை மாலதி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் கோ.ரமேஷ்குமார் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!