குமாரபாளையம் அருகே சொகுசு பேருந்து விபத்து, 4 பேர் பலி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த பல்லக்காபாளையம் தேசியநெடுஞ்சாலை பகுதியில் முன்னாள் சென்றுகொண்டிருந்த சவுக்குக் கட்டை ஏற்றிச் சென்ற லாரி மீது பெங்களூருலிந்து கேரளா நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் கேரளாவை சேர்ந்த பேருந்து உதவி ஓட்டுநர் சித்தார்த், பந்தலம் பகுதியைச் சேர்ந்த மினி வர்க்கீஸ் என்ற பெண் மற்றும் அவரது மகன் ஆசல் லிஜோ  ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பேருந்தில் பயணம் செய்த மேலும் 15 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து தகவலறிந்த குமாரபாளையம் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த் விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!