சட்டையம்புதூர் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் முப்பூஜை பெருவிழா

சட்டையம்புதூர் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் முப்பூஜை பெருவிழா வருகின்ற 13 ந்தேதி முதல் துவங்குகிறது.

விழாவிற்காக பூஜைகள் செய்யப்பட்டு பந்தல்கால் நடப்பட்டது.இதனைத் தொடர்ந்து கல்வடங்கம் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடம் எடுத்து வருதல். ஊரில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்தல், புற்று மண் எடுத்து வருதல்,  அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடத்தப்படும். இரவு புடவை படைத்து படைக்கலம் புறப்பாடு நடைபெறும். 15 ந்தேதி புதன்கிழமை மாசாணி அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் முப்பூஜை பெருவிழா நடைபெறும். தொடர்ந்து பிரசாதங்கள்,அன்னதானம் வழங்கப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!