கிராமசபா கூட்டத்தை முறையா நடத்த வேண்டும் – பாஜக கோரிக்கை

ஆகஸ்ட் 15 அன்று திருச்செங்கோடு ஒன்றியப் பகுதியில் உள்ள 26  கிராம பஞ்சாயத்துகளிலும் முறையாக கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என கோரி திருச்செங்கோடு ஒன்றிய பா.ஜ.க சார்பாக திருச்செங்கோடு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவில் கிராம சபை கூட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஏழு நாட்கள் முன்னதாகவே கூட்டம் நடைபெறும் இடம் நேரம் ஆகியவை குறித்து முறையாக  பொதுமக்களுக்கு தகவல் அளிக்க வேண்டும், கிராம சபையில் வைக்க வேண்டிய வரவு செலவு விவரங்கள் தணிக்கை அறிக்கைகள், போன்ற அனைத்து ஆவணங்களையும் முறைபடுத்தி மக்கள் பார்வகை்கு கட்டாயமாக வைக்க வேண்டும், கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை அரசு அலுவலர்கள் நிராகரிக்காமல், அவை தீர்மானமாக நிறைவேற்றுவதை உறுதிபடுத்த வேண்டும், அரசாணையில் குறிப்பிட்டுள்ள குறை எண் வரம்பின் அளவிற்கு மக்கள் கிராம சபையில் பங்கேற்பதை உறுதிபடுத்தவும் கூட்ட நடவடிக்கைகளை புகைப்படம் எடுத்து ஆவணபடுத்த வேண்டும், கிராம சபை தீர்மானங்களின் நகலை வேண்டும் நபர்களுக்கு தாமதமின்றி வழங்க வேண்டும், போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

பாஜக ஒன்றிய தலைவர் ரமேஷ் , ஒன்றிய பொதுச்செயலாளர்கள் மணிஷ், ராஜவேல், மாவட்ட பொருளாதார பிரிவு துணை தலைவர் அப்புசாமி, மாவட்ட  இளைஞர் அணி செயலாளர் மதியரசு, மாவட்ட ஊடக பிரிவு கலைவாணன் ஆகியோர்  மனு அளித்தனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!