நாமக்கல் அருகே மூதாட்டி கொலை.4 சவரன் நகை கொள்ளை

நாமக்கல் அடுத்த பொட்டிரெட்டிபட்டி கங்காணி தெருவைச் சேர்ந்தவர் அமராவதி(70). இவருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அமராவதியுடன் அவரது மகள் ராஜேஸ்வரி(53) வசித்து வந்தார். மகன்கள் மூவரும் தனித் தனியாக அதே பகுதியில் வசித்து வருகின்றனர். ராஜேஸ்வரி வழக்கம் போல் தேசிய ஊரக வேலை வாய்ப்பு பணிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார். வீட்டில் இருந்த அமராவதி இறந்து கிடந்ததை கண்டார்.  இதுகுறித்து எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அமராவதியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த தடையங்களை சேகரித்தனர். காவல்துறை மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.

காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் அமராவதி கழுத்து நெறித்து கொல்லப்பட்டிருப்பதும், அவர் அணிந்திருந்த தங்க செயின் மற்றும் காதில் இருந்த தோடுகள் என 4 சவரன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்தது. இறந்து போன மூதாட்டி வீட்டில் தனியாக இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொலை செய்தவர்கள் யார் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!