காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

 

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.ஆசியா மரியம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.

மேட்டூர் நீர் தேக்கத்திலிருந்து கடந்த 19.07.2018 முதல் சம்பா சாகுபடியின் பொருட்டு, பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டு வரப்படுகிறது.  

 தற்போது, கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால், கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளிலிருந்து சுமார் 1 இலட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  மேற்படி வெளியேற்றப்படும் நீரானது மேட்டூர் அணைக்கு ஒரிரு தினங்களில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டமானது 120 அடி என்ற முழுக் கொள்ளளவினை நெருக்கி வருவதால்,  அதிக அளவில் நீர்வரத்து வெளியேற்றப்பட்டு  வருகிறது.  

இதனால்,  காவிரி ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் எவரும் உரிய பாதுகாப்பின்றி காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல் மற்றும் மீன்பிடித்தல்  போன்ற  காரியங்களில் ஈடுபடவேண்டாம். நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்து பொதுமக்களுக்கு அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்படும். அபாயகரமான பகுதிகளில் நின்று செல்போனில் செல்பிகள் எடுக்கக்கூடாது.

         குழந்தைகள் காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள் மற்றும்  நீர்நிலைகளில், இறங்கிடாத வகையில் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் விழிப்புடன்  இருக்க வேண்டும். எனவே, காவிரி ஆற்றின் கரையோர கிராமங்களின் தாழ்வான பகுதிகளில்  வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். என அந்த செய்திகுறிப்பில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!