சட்டையம்புதூர் ஸ்ரீஅங்காளம்மன் கோயில் முப்பூஜை, தீர்த்தக்குடம் எடுத்த பக்தர்கள் ஊர்வலம்.

திருச்செங்கோடு சட்டையம்புதூர் ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயில் முப்பூஜை பெருவிழா  கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திங்கட்கிழமை பகதர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர்.

கடந்த வியாழக்கிழமை பூஜைகள் செய்யப்பட்டு பந்தல்கால் நடப்பட்டது.ஆடிமாதம் நடத்தப்படும் முப்பூஜை பெருவிழாவில் கல்வடங்கம் காவிரி ஆற்றிலிருந்து ஏராளமான பெண்கள், மற்றும் சிறுமிகள் பம்பை மேளம் முழங்க, அம்மன் விருத்தப் பாடல்களை பாடி  தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். இன்று செவ்வாய்க்கிழமை ஊரில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்தல், புற்று மண் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெறும். அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடத்தப்படும். இரவு புடவை படைத்து படைக்கலம் புறப்பாடு நடைபெறும். 15 ந்தேதி புதன்கிழமை மாசாணி அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் முப்பூஜை பெருவிழா நடைபெற இருக்கிறது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!