விலையில்லா செம்மறி மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம்.

தமிழக அரசின் விலையில்லா செம்மறி மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்திற்கு பயனாளிகளை இணைப்பது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

தமிழக முதல்வரின் விலையில்லா வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகள் வழங்கும்திட்டம் 2018-19ம் ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் 21 கிராமங்களைச் சேர்ந்த 4313 பயனாளிகளுக்கு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

                அக்டோபர்-2018ம் மாதத்தில சின்னமணலி, கொடிக்காள்புதூர், கோப்பணம்பாளையம், தேவனூநாடு, கூத்தாநத்தம், கொமரிபாளையம், மங்களபுரம், கோனூர், கலியனூர்அக்உறாரம், இளநகர், மேட்டுப்பட்டி, கொத்தமங்கலம், எடப்புளிநாடு, கோட்டப்பாளையம்;, குமாரபாளையம், குன்னமலை, கல்யாணி,கவுண்டம்பாளையம், கல்குறிச்சி, சித்தாளந்தூர், கட்டனாச்சம்பட்டி ஆகிய கிராமங்களில் திட்டம் செயல்படுத்தப்படும். முதல் கிராம சபா, 27.08.2018 அன்றும், இரண்டாவது கிராம சபா 03.09.2018 நடத்தப்பட்டு பயனாளிகள் தேர்வு இறுதி செய்யப்படும். கிராம ஊராட்சியில் கிராம சபா மூலம் தேர்வு செய்யப்படும் தகுதியுள்ள பயனாளிகள் அனைத்து பயனாளிகளுக்கும் வெள்ளாடுகள்- செம்மறியாடுகள் கிடைக்கும் வகையில் இலக்கு நிர்ணயித்து திட்டம் சாதனையிட தெரிவிக்கப்பட்டுள்ளது.

                இத்திட்டத்தில் பயனடைய பயனாளிகளின் தகுதிகள் : பயனாளிகள் அனைவரும் பெண் பயனாளியாக இருக்கவேண்டும். ஏழ்மையிலும் ஏழ்மையான பெண்கள், நிலமில்லா விவசாய தொழிலாளி, சம்மந்தப்பட்ட கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும், தற்சமயம் பசு மற்றும் வெள்ளாடு, செம்மறியாடு இல்லாதவராக இருத்தல் வேண்டும். மத்திய , மாநில அரசு ஊழியராகவும் , நிறுவனம் , கூட்டுறவுத்துறை ஊழியராகவும், கிராம பஞ்சாயத்து , உள்ளாட்சி உறுப்பினராகவும் (உறுப்பினர் மனைவி , அம்மா , அப்பா , மாமனார் , மாமியார் , மருமகன் , மருமகள் , அவரின் மகன் , மகள்) இருந்தல் கூடாது. ஏற்கனவே இலவச வெள்ளாடு,செம்மறியாடு வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவராக இருத்தல் கூடாது. பெண்களின் சிறப்பு பிரிவினரான விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்று திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோர்களுக்கு முன் உரிமை அளிக்கப்படும். ஆகவே மேற்கண்ட தேதிகளில் நடைபெறும் சிறப்பு கிராமசபைக்கூட்டங்களில்  திட்டத்தில் பயனடைய விரும்புவோர் கலந்துக்கொண்டு விண்ணப்பத்தினை அளித்து பயனடையளாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!