”அட்டாக்” அரசியல் வசனங்களுடன் நடிகர் விஜயின் சர்க்கார்.

நடிகர் விஜயின் நடிப்பில் வேகமாக தயாராகி வருகிறது சர்க்கார் திரைப்படம். இப்படம் வரும் தீபாவளி அன்று வெளியிட சர்க்கார் படக் குழுவினர் முடிவு செய்திருக்காங்க. இந்த படத்தோட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே சர்ச்சைக்கு உள்ளானது. நடிகர் விஜய் புகைபிடிப்பது போன்று போஸ் கொடுத்தத்தற்காக விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில இப்படத்தின் டீசர் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்பட இருக்கிறது. சர்க்கார் படத்தில் தற்போதைய அரசியல் நிலவரங்களை உள்ளடக்கிய அதிரடியான அரசியல் வசனங்கள் இடம் பெற்றிருப்பதா கூறப்படுகிறது. இந்த அரசியல் அட்டாக் வசனங்களில் சிலவற்றை டீசரில் இணைத்து வெளியிட படக் குழுவினர் முடிவு செய்திருக்காங்க, இதனால சர்க்கார் பட டீசருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பும் எனத் தெரிகிறது.

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!