திருச்செங்கோட்டில் மாரத்தான் போட்டி

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் சேலம் பெரியார் பல்கலை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான மாரத்தான் போட்டி இன்று காலை நடந்தது.போட்டியை பெரியார் பல்கலை உடற்பயிற்சித் துறை இயக்குனர் வெங்கடாசலம் தொடங்கி வைத்தார். கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கி முத்தநாயக்கன்பாளையம்,ஏமப்பள்ளி வழியாக சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தில் போட்டி முடிந்தது. மொத்தம் 10 கிமீ தொலைவு நடந்த இந்த மாரத்தான் போட்டியில் பெரியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட 15 கல்லூரிகளில் இருந்து 67 மாணவிகள்,60 மாணவர்கள் என மொத்தம் 127 மாணவர்கள் பங்கேற்றனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!