அனுமதியற்ற மனைகள் வரைமுறைப் படுத்த முகாம்- எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

திருச்செங்கோடு நகராட்சி நிர்வாகம் சார்பில் அனுமதியற்ற மனைகள் வரன்முறைப் படுத்துதல் திட்ட முகாமும், விற்பனை செய்யப்பட்ட மனைகளுக்கு அனுமதி வழங்கும் சிறப்பு முகாமும்  திங்கட்கிழமை சட்டையம்புதூர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமிற்கு திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர். பொன்.சரஸ்வதி, நகராட்சி பொறுப்பு ஆணையாளர்.சுகுமார், நகரமைப்பு அலுவலர்.வேலாயுதம், மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொதுமக்கள் மனைகளை அங்கீகரிக்க  விண்ணப்பித்து பயன்பெற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
திருச்செங்கோடு நகராட்சியில் 33 வார்டுகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத,அனுமதியற்ற மனைகள் மற்றும் மனைப்பிரிவுகள் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் தங்களது மனைகளை முறைப்படுத்த விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு முகாமில்  காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மனுக்கள் பெறப்பட்டது. இம்முகாமில் மனைகளை அங்கீகரிக்க விண்ணப்பதாரர்கள் சாலை மற்றும் பட்டா அளவுடன் கூடிய மூன்று வரைபடங்கள், மனைப்பிரிவு வரைபடம்,சுற்று சார்பு வரைபடம், பத்திரங்கள், பட்டா, சிட்டா அடங்கல், ஒரு வாரத்திற்கு முன்பு பெறப்பட்ட வில்லங்க சான்று, விவசாய நிலத்தில் அமையும் நிலையில் இருந்தால் வட்டாச்சியர் சான்று  போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பித்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டு தகுதியான மனுக்களுக்கான ஆணைகள் உடனடியாக வழங்கப்பட்டது. இந்த வகையில் நகராட்சி நிர்வாகத்திற்கு ரூபாய்16 இலட்சத்து48 ஆயிரம் தொகை வசூலிக்கப்பட்டது. ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்களுக்கு விரைந்து ஆணைகள் வழங்கப்படும் என  நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!