உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் உருவாக்கம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

நாமக்கல் மாவட்டம் , திருச்செங்கோடு வட்டம், மோடமங்கலம் பகுதியில் மாநில அட்மா  மாவட்டத்திற்குள் பயிற்சி வகையில் கூட்டுப் பண்ணையத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் உருவாக்கம் பற்றி கூட்டுப்பண்ணைய குழு உறுப்பினர்களுக்கு வேளாண்மை வகுப்பு நடத்தப்பட்டது.

திருச்செங்கோடு வேளாண்மை உதவி இயக்குநர் அன்புச்செல்வி தலைமை வகித்தார். நாமகிரிபேட்டை பாரம்பரியம் குழுவின்  மேலாளர் அசோக் கலந்து கொண்டு கூட்டுபண்ணையத்தின் வழிமுறைகள், பதிவேடுகள் பராமரிப்பு, உழவர் உற்பத்தியாளர் குழு, உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் உருவாக்கம் குறித்தும் விளக்கமளித்தார். உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் தொழில் செய்வது பற்றியும்,அதனை பங்கீட்டு உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் குழு நடத்துவது குறித்தும் கூறினார். நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர் ஜெயமணி திட்டத்தின் நன்மைகளை தெரிவித்தார். திருச்செங்கோடு, அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஹேமலதா, அட்மா திட்ட செயல்முறைகளை குறித்தும், உழவன் செயலி பதிவிறக்க பயன்களையும் தெரிவித்தார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!