காடச்சநல்லூர் கூட்டுறவு வங்கி முற்றுகை – கொமதேகவினர் போராட்டம்.

பள்ளிபாளையம் அடுத்த காடச்சநல்லூர் உழவர் பணி கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2016 ம் ஆண்டு 39 விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டிற்கான பிரிமியம் தொகை பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. 2016 ம் ஆண்டு வறட்சி பாதிப்பு காரணமாக பயிர்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் காடச்சநல்லூர் உழவர் பணி கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்த விவசாயிகள் 39 பேருக்கு இதுவரை நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை. இதுகுறித்து காப்பீட்டு நிறுவனத்திடம் விவசாயிகள் கேட்ட போது 39 விவசாயிகளுக்கும் காப்பீடு பதிவு செய்யப்படவில்லை எனத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை காடச்சநல்லூர் உழவர் பணி கூட்டுறவு சங்கத்தினை முற்றுகையிட்டு போராட்ட,ம் நடத்தி வருகின்றனர்.

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!