கோல்டன் ஹார்ஸ் ரவி, பஸ் உரிமையாளர் சங்க தலைவராக போட்டியின்றித் தேர்வு.

திருச்செங்கோடு பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர், பொருளாளர் ஆகியோர் போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். செயலாளர் பதவிக்கு போட்டி ஏற்பட்டுள்ளதால் அப்பதவிக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுகிறது.

2018 முதல் 2021 வரையுள்ள மூன்றாண்டுகளுக்கு திருச்செங்கோடு பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தற்போதைய தலைவர் கோல்டன் ஹார்ஸ் ரவி மீண்டும்  தலைவராக போட்டியின்றி தேர்வு பெற்றார். இவர் எஸ்கேவி  கல்வி நிறுவனங்களின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாளர் பதவிக்கு எஸ்ஆர்டி பஸ்  வெள்ளியங்கிரியும், உபதலைவர் பதவிக்கு எம்கேஎஸ் பஸ் சர்வீஸ் செந்தில்குமாரும், துணை செயலாளர் பதவிக்கு எம்ஏஎம் பஸ் சர்வீஸ்  ராஜசேகரும் போட்டியின்றி தேர்வு பெற்றனர். நிர்வாகக்குழு உறுப்பினர் பதவிக்கு யாரும் வேட்பு மனு செய்யாததால்  தற்போதைய உறுப்பினர்கள்  11 பேரும் தொடர்ந்து பதவியில் இருப்பார்கள்.

    செயலாளர் பதவி்க்கு மட்டும்  தற்போதைய செயலாளர் ஆர்விஆர் லோகநாதனும், டிஎஸ்டி என்ற பொன்னுசாமியும்  மனு தாக்கல் செய்துள்ளனர். செயலாளர் பதவிக்கான தேர்தல்  வருகிற 8 ந் தேதி மேற்கு முனியப்பன் கோவில் தெருவில் உள்ள  சித்தார்த்தா ஓட்டல் கூட்ட அரங்கில் காலை 10 முதல் மதியம் 1 வரை நடைபெறும். 5 பேர் கொண்ட தேர்தல் குழு தேர்தலை நடத்துகிறது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!