திருச்செங்கோட்டைச் சுற்றி ரிங் ரோடு அமைக்க வேண்டும் – பைனான்சியர்கள் கோரிக்கை.

திருச்செங்கோடு கொங்கு சமுதாயக்கூடத்தில்  திருச்செங்கோடு நிதி நிறுவனங்கள் சங்கத்தின் 23 வது பேரவைக்கூட்டம் தலைவர் அத்தியப்பன் தலைமையில் நடந்தது.   செயலாளர் அல்லிமுத்து வரவேற்றார். பொருளாளர் குருசாமி ஆண்டறிக்கை வாசித்தார். ஆடிட்டர் ராஜாரமணன் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார். தொழிலில் உள்ள நெருக்கடிகள் குறித்தும், எதிர் கொள்ள வேண்டிய சவால்கள் குறித்தும், அரசின் நிலைப்பாடு  குறித்தும்  நாமக்கல் ஆடிட்டர் வெங்கட சுப்ரமணியம், சேலம் இளையப்பன், திண்டுக்கல் சாந்தினி பழனிசாமி ஆகியோர் பேசினர். வக்கீல் பரணீதரன் நிதி நிறுவனங்களுக்கான சட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்,  இறுதியாக கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

 நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு, குமாரபாளையம்  தாலுகா பகுதிகள் வியாபார கேந்திரங்களாகவும், தொழி்ல் வளர்ச்சி அடைந்த பகுதிகளாகவும், கல்வி நிறுவனங்களின் மையமாக இருப்பதால் இந்த மூன்று நகரங்களையும்  இணைத்து புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்.  நான்கு ரத வீதிகளிலும் வாகனப் போக்குவரத்து  அதிகரித்து  வருவதால் அதனைப்போக்க திருச்செங்கோட்டைச் சுற்றி ரிங் ரோடு அமைக்க வேண்டும்.

முகூர்த்த நாட்களில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோயிலில் அதிக திருமணங்கள் நடப்பதால்  மலைக்கு வாகனங்கள் வந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க புதிதாக கூடுதல் மலைப்பாதை அமைக்க வேண்டும். நகராட்சியைச் சுற்றியுள்ள பகுதிகள் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதால் நகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ராமசாமி நன்றி கூறினார். நிதி நிறுவனங்களின் பங்குதாரர்கள், உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!