திருச்செங்கோடு,உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதலாம் ஆண்டு துவக்க விழா.

தமிழக அரசின் கூட்டுப்பண்ணைய திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 56 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டது. இதில் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், எலச்சிபாளையம் மற்றும் மல்லசமுத்திரம் வட்டாரத்தில் அமைக்கப்பட்ட 10 உழவர் உற்பத்தியாளர் குழுக்களை ஒருகிணைத்து வானவில் கூட்டுப்பண்ணையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டது.

     இந்நிறுவனத்தில் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருச்செங்கோடு உழவர்சந்தையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், 50 உழவர் ஆர்வலர் குழுவில் உள்ள பங்குமுன் பணத்தை நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு மாற்றுவது மற்றும் நிறுவனத்தின் வணிகத் திட்டம் பற்றி விவரிக்கப்பட்டது.

     நிகழ்ச்சியில் இயக்குநர் முத்துசாமி,  நாமக்கல் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர்(வேளாண் வணிகம்) வளர்மதி தலைமை வகித்தார். வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) அசோகன் பாரத பிரதமர் வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடன் பெறுவது, கூட்டுப்பண்ணையம் திட்டத்தில் வாங்கப்பட்ட டிராக்டர்களுக்கு உழவுக் கருவிகள் கொள்முதல் செய்வது, மாவட்ட ஆட்சித் தலைவர் அனுகி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நீர் நிலைகளின் குடிமராமத்து பணிகளை உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் மேற்கொள்ள உத்தரவு பெற்று அதனை செயல்படுத்துவதன் மூலம் நிதி ஆதாரத்தை மேம்படுத்தி கொள்வது எவ்வாறு என்பது குறித்து விளக்கமளித்தார்.

     இக்கூட்டத்தில் வங்கி மேலாளர்கள், கூட்டுறவு சங்க அதிகாரிகள், வேளாண்மைத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!