நாமக்கல் மாவட்டத்தில்,கோமாரிநோய் தடுப்பூசி முகாம்- ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியாமரியம் தொடங்கி வைத்தார்.  நாமக்கல் அடுத்த வீசாணத்தில் கால்நடைபராமரிப்பு துறையின் சார்பில் நடைபெற்ற முகாமில் ஆட்சியர் பங்கேற்று 15-வது சுற்று கோமாரிநோய் தடுப்பூசி முகாம் மற்றும் கால்நடைப்பாதுகாப்பு திட்ட முகாமினை தொடங்கி வைத்து கால்நடை வளர்ப்பவர்களுக்கு தாது உப்பு கலவைகளையும், சிறந்த கன்றுகளுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம் இ.ஆ.ப அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு 15வது சுற்று கோமாரிநோய் தடுப்பூசிப்போடும் பணி செப்டம்பர்-21 வரை நடைபெற உள்ளது.  மாவட்டத்தில் மொத்தமுள்ள 3.53 இலட்சம் கால்நடைகளுக்கும் 100 சதவீதம் முழுமையாக கோமாரிநோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. கால்நடை பாதுகாப்புத்திட்ட முகாம் 2018-19-ஆம் ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் தலா 14 முகாம்கள் வீதம் 219 முகாம்கள் செப்டம்பர் -2018 முதல் டிசம்பர்-2018 வரை நடைபெறவுள்ளது.

இத்தடுப்பூசிப்பணிக்காக நாமக்கல் மாவட்டம் முழுவதும் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்டு 113 தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் நேரில் சென்று அந்தந்த கிராமங்களிலேயே  தடுப்பூசிப்பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, நாமக்கல் மாவட்ட விவசாய பெருமக்கள் மூன்று மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகள், பசு, எருது, எருமை ஆகிய கால்நடைகளை அழைத்துச் சென்று ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிடப்பட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் முகாம்களில் தங்களது கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி தவறாது போட்டுக் கொள்ள வேண்டும். எனத் தெரிவித்தார்

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!