கள்ள மது விற்பனை தடை செய்ய கோரி ஆட்சியரிடம் அனைத்து கட்சியினர் மனு

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் அரசின் அனுமதி பெறாமல் பார்கள் இயங்கி வருவதாகவும், 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் இந்த பார்களில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதாகவும் இதேபோல் கள்ள லாட்டரி மற்றும் குட்கா விற்பனை தடையின்றி நடைபெற்று வருவதால் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்களின் குடும்பங்கள் கடும்பாதிப்படைந்து வருவதாகவும், ஆகவே குமாரபாளையம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் பார்கள், கள்ள லாட்டரி மற்றும் குட்கா விற்பனையை தடை செய்ய வேண்டும் எனக் கோரி அனைத்து கட்சிகள் சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியாமரியத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் போராட்டம் நடத்தப்படும் என கட்சியினர் தெரிவித்தனர்.

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!