காவிரி கரை ஓரம் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை.

நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் பள்ளிபாளையம் ஜேடர்பாளையம் பரமத்திவேலூர் உள்ளிட்ட காவிரி ஆற்றுக் கரை ஓரப் பகுதிகளில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கழிவுப் பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ் கந்தசாமி தெரிவித்துள்ளதாவது:-

காவிரியில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட வெள்ளத்தால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாத நிலையில் தற்போது கரை ஓரப் பகுதிகளில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்று சூழ்நிலையில் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது ஆகவே தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் மலை போல் தேங்கி இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி காவிரி குடிநீர் பாதுகாப்பான முறையில் மக்களுக்கு வழங்கவும் விவசாயிகள் காவிரி நீரை பயன்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  மாவட்ட நிர்வாகத்த்திற்கு கோரிக்கை வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!