சித்தாளந்தூரில் தீ விபத்து.ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்.

திருச்செங்கோடு அடுத்த சித்தாளந்தூர் அடுத்த பனங்காடு குதியைச் சேர்ந்தவர் செல்லம்மாள் (54). இவரது கணவர் ரிக் லாரியில் பணிபுரிந்து வருகிறார். இன்று அதிகாலை தனது குடிசை வீட்டில் செல்லம்மாள் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது பொருட்கள் கருகும் வாசனை வந்ததை அடுத்து செல்லம்மாள் வீட்டிலிருந்து வெளியே வந்தார். வீட்டில் மேற்கூரை எரிந்து கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்லம்மாள் கூச்சலிட்டார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை கட்டுப்படுத்த முயற்சித்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருச்செங்கோடு தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். விபத்தில் குடிசை வீடு மற்றும் வீட்டில் இருந்த இரண்டு இரு சக்கர வாகனம் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இந்தசம்பவம் குறித்து திருச்செங்கோடு ஊரக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!