அரசு பள்ளிகளில் நீட் பயிற்சிக்கு எதிர்ப்பு- ஆசிரியர்கள் போராட்டம்.

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நீட், ஜே.இ.இ உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் அவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக அரசு பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை பயிற்சி அளித்து வருகிறது. இதன் கீழ் நாமக்கல் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் நாமக்கல் வட்டாரத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்புகளை புறக்கணித்து 100க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், இந்த பயிற்சி வகுப்புகள் முதுகலை ஆசிரியர்களுக்கு கூடுதல் பணி சுமை அளிக்கும் என்றும், பயிற்சியினால் முதுகலை ஆசிரியர்கள் 7 நாட்களும் பள்ளிகளுக்கு வந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும், 11,12-ம் வகுப்புகளுக்கு அரசு பொது தேர்வு நடைபெற உள்ளதால் அதில் முழு கவனம் செலுத்த வேண்டி உள்ளதால் தங்களை இந்த பயிற்சியில் இருந்து விடுவித்து அரசு மாற்று ஏற்பாடு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!