தாட்கோ திட்டங்களில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

தாட்கோ கடன் பெறுவது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது.

   நிலம் வாங்குதல், நிலம்மேம்பாடு  திட்டம், துரித மின் இணைப்பு திட்டம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சில்லறை விற்பனை நிலையம்  அமைத்தல், தொழில்முனைவோர் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு 18 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆதிதிராவிடர்கள் விண்ணப்பிக்கலாம்.  இதற்கான வருமான உச்சவரம்பு ரூ.1.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.  இதே போல். இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், மருத்துவமையம், மருந்தியல், கண்கண்ணாடியகம், மூடநீக்கம் மையம், இரத்த பரிசோதனை நிலையம்  மற்றும் அதனை மேம்படுத்துதல் ஆகிய திட்டங்களுக்கு வயது வரம்பு 18 வயது முதல் 45 வயது வரை ஆகும்.

   மேலும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான சுழல்நிதி மற்றும் பொருளாதார கடனுதவி ஆகியவைகளுக்கு மானியத்துடன் கூடிய நிதியுதவி  வழங்கப்படும். சுய உதவிக்குழுக்களுக்கு பொருளாதார கடனுதவி மானியம்  திட்டத்தொகையில் 50 சதவீதம்  ஆகும். மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி, மேலாண்மை இயக்குநர் விருப்புரிமை நிதி, தாட்கோ தலைவர் அவர்களின் விருப்புரிமை நிதி,  இந்திய குடிமைப்பணி முதன்மைத்தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி,  சட்ட பட்டதாரிகளுக்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணையத்தொகுதி–ஐ முதல்நிலை தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு நிதியுதவி,  பட்டயகணக்கர்,செலவுக்கணக்கர் ,நிறுவன செயலர்களுக்கு நிதியுதவி, தொழில் தையற் கூட்டுறவுச் சங்கங்களுக்கு நிதியதவி ஆகிய திட்டங்களில் பயன்பெறும் ஆகிய திட்டங்களில் பயன்பெறும் ஆதிதிராவிடர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!