வேலைவாய்ப்பு முகாம் – நாமக்கல் வேலைவாய்ப்பு அலுவலக்த்தில் நடக்கிறது

தனியார்துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 14.09.2018 அன்று நடைபெறவுள்ள இந்த முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத் துறைகளுக்கு அவர்களது பதிவு மூப்பின்படி அரசு பரிந்துரைக்கப்படும். எனவே, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள் தனியார் துறையில் வேலைக்கு சென்றால் தங்களது பதிவு ரத்து செய்யப்பட்டு விடுமோ என்று அச்சப்பட வேண்டியதில்லை.

         இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், கண்காணிப்பாளர், மேலாளர், கணினி பயிற்றுநர், கணக்காளர், காசாளர் தட்டச்சர், மெக்கானிக், சேல்ஸ் அசோசியேட் சூப்பர்வைசர்,இரவு காவலர் மற்றும் ஆசிரியர் போன்ற பணிகளுக்கு டிப்ளமோ, பட்டபடிப்பு மற்றும் பள்ளிப்படிப்பு பி.எட்., முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித்தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியார்த் துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

         ஆகவே, மேற்படி பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் அனைவரும் வருகின்ற 14.09.2018 அன்று காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது தவிர இதர கல்வித்தகுதிகள் உடையோரும் தகுந்த பணியிடங்களுக்கு பரிசீலிக்கப்படுவர் என மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!