வையப்பமலை அரசு பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற மாணவர்கள் கோரிக்கை

எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் இந்திய மாணவர் சங்கம் எலச்சிபாளையம் ஒன்றியக் குழுவின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய செயலாளர் எம் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் மெளலிதரன் முன்னிலை வகித்தார்

ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஆர் சக்தி கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினார்.

எலச்சிபாளையம் அரசு மேல்நிலை பள்ளி முன்பு நிழற் கூடம் அமைக்க வேண்டும், பள்ளி முன்பு பேருந்துகள் நிறுத்தி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏற்றிச் செல்லவேண்டும். அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளிகளிள் சைக்கிள் மற்றும் இலவச மடிகணினி வழங்கிடவேண்டும், வையப்பமலை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும், எலச்சிபாளையம் மல்லசமுத்திரம் ஒன்றியம் முழுவதும்  உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிட வேண்டும்,அரசு பள்ளியின் கழிவறைகளை சுத்தமாக வைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இறுதியாக மாவட்ட குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!