தேசிய துப்பாக்கி சுடும் போட்டி, அரசு பள்ளி மாணவர் சாதனை

தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் திருச்செங்கோடு அரசு பள்ளி மாணவர் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

மராட்டிய  மாநிலம் அவுரங்காபாத்தில் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம் உட்பட 19 மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் நிதிஷ்குமார் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை புரிந்தார் சாதனை படைத்த மாணவன் நிதிஷ்குமாரை திருச்செங்கோடு பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேஷ் குமார் மற்றும் ஆசிரியர்கள் செந்தில்குமார் விஜயானந்தன் திருவருட்செல்வன் ஆசிரியை லதா ஆகியோர் பாராட்டி வாழ்த்தினார்கள்

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!