திருச்செங்கோடு,டிசிஎம்எஸ்சில் ரூ. 25 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை.

திருச்செங்கோடு வேளாண்  உற்பத்தியாளர்கள்  கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில்   நேற்று  நடைபெற்ற வாராந்திர மஞ்சள் ஏலத்தில் 550 மஞ்சள் மூட்டைகள் ரூ 25 லட்சத்திற்கு       விற்பனையானது. 

     ஆத்தூர், கெங்கவல்லி, கூகையூர், கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூர், ஜேடர்பாளையம், பரமத்திவேலூர், நாமக்கல், மேட்டூர், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து   விவசாயிகள் மஞ்சள் மூட்டைகளை  விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இந்த  மஞ்சள் மூட்டைகளை  கொள்முதல் செய்ய   ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய ஊர்களிலிருந்து 50 க்கும் மேற்பட்ட  வியாபாரிகள்   வந்திருந்தனர். டெண்டர்  மூலம் ரூ 25  லட்சத்திற்கு 550 மஞ்சள் மூட்டைகள் விற்பனையானது.  விரலி  ரகம் குவிண்டாலுக்கு ரூ 6402 முதல் 7399 வரையும் , கிழங்கு ரகம் ரூ 6288முதல் ரூ 6799வரையும், பனங்காளி ரகம் குவிண்டாலுக்கு ரூ11299முதல் 12222 வரையும் விலை போனது. நேற்று நடந்த ஏலத்தில்   விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதுடன்,  மற்ற விற்பனை நிலையங்களை விட விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ 300 அதிகம் கிடைத்தது எனவும்   டிசிஎம்எஸ் அலுவலர்கள் தெரிவித்தனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!