திருச்செங்கோட்டில் இந்துமுன்னணி விநாயகர் ஊர்வலம்

இந்துமுன்னணி சார்பில் திருச்செங்கோடு நகரில் இரண்டு இடங்களிலும், தண்ணீர்பந்தல்பாளையம்,   வையப்பமலை ஆகிய பகுதிகளில் 5 இடங்களிலும்  விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. 

இந்த 7 சிலைகளும் திருச்செங்கோடு பெரியதேர் அருகில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறையமங்கலம் காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு இந்துமுன்னணி திருச்செங்கோடு நகர பொது செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். இந்துமுன்னணி மாநில பொருளாளர் .சண்முகசுந்தரம் சிறப்புரையாற்றி விநாயகர் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.மாவட்ட பொதுசெயலாளர் கோபிநாத், மாவட்ட செயலாளர்கள் சரவணன், கணேசன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், திருச்செங்கோடு நகர தலைவர் சின்னுசாமி, ஒன்றிய செயலாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!