தமிழகத்தில் எப்போதும் மின்வெட்டு வராது – அமைச்சர் தங்கமணி உறுதி.

திருச்செங்கோட்டில் முன்னாள் முதல்வர் அண்ணாத்துரையின்  119  ஆண்டு பிறந்த நாள் விழா  பொதுக்கூட்டம்  நடைபெற்றது  நிகழ்ச்சிக்கு  திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி தலைமை வகித்தார்.  நிகழ்ச்சியில்  நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும்  தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சருமான  தங்கமணி, முன்னாள் அமைச்சர் விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தங்கமணி  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அரசு சிறப்பாக நடைபெற்று வருவதை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் கழகத்திற்கு துரோகம் விளைவித்த தினகரனும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக தமிழகத்தில் மின்வெட்டு வரப்போகிறது என்று பேசி வருகிறார்கள். அது முற்றிலும் தவறான செய்தி ஏனென்றால் ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போதே தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றி அமைத்துள்ளார். இந்திய சமன்பாட்டு அறிக்கை கூட தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது என அறிக்கை வழங்கியுள்ளது கடந்த 9ஆம் தேதியும் பத்தாம் தேதியும் மத்திய தொகுப்பிலிருந்து வரவேண்டிய மின்சாரம் பராமரிப்பு பணிக்காக வழங்கப்படவில்லை. அதேபோல காற்றாலை மின்சாரம் இருந்த காரணத்தால் அனல் மின்சார தயாரிக்கும் பணியை நிறுத்திருந்தோம்  திடீரென்று காற்றாலை மின்சாரம் வராத காரணத்தால் அனல் மின்சார உற்பத்தியை திடீரென கொடுக்க முடியாத சூழலில் இருந்தோம்

‌அதை அடுத்த நாளே சரிசெய்து சகஜ நிலைக்கு திருப்பி அமைத்த விட்டோம் தற்போது மின் விநியோகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது நிலக்கரி இல்லை என்று வதந்திகளை பரப்பி வருகிறார்கள் நிலக்கரி குறித்து பிரதமருக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதம் ஒரு நினைவூட்டல் கடிதம் தான் ஏற்கனவே தமிழகத்திற்கு அதிக நிலக்கரி வழங்க வேண்டும் என்று முதல்வர் கேட்டுள்ளார்கள் அதற்கான நினைவூட்டல் கடிதம் தான் அது திமுக ஆட்சியில் மின்வெட்டே இல்லாதது போலவும் இந்த ஆட்சியில் தான் மின்வெட்டு இருப்பது போலவும் பேசி வருகிறார்கள். தமிழகத்திற்கு மின்வெட்டை அறிமுகம் செய்தவர்கள் திமுகவினர்தான், இதனால் மின்வெட்டு குறித்து பேசுவதற்கு திமுகவுக்கு அருகதை இல்லை முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்கள் நானும் ரயில்வே மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளேன் வரும் 18ம் தேதி மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து அதிக வேகன்களை நிலக்கரியை ஏற்றிவர வழங்க வேண்டுமென்று கேட்க உள்ளேன் என்று கூறினார். நிலக்கரியை  வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது அதற்கான டெண்டர் கோரப்பட்டு உள்ளது இன்னும் இருபது இருபத்தைந்து தினங்களில் அந்த நிலக்கரியும் வந்து சேரும் எனவே மக்கள் இந்த வதந்தியை நம்ப வேண்டாம் . மேலும் கூடங்குளத்தில் 400 மெகாவாட் மின் உற்பத்தி துவக்க ப்பட்டுள்ளது எனவே தமிழகத்தில் ஒருபோதும் மின்வெட்டு வராது என்று கூறினார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!