மதுகுடிக்க பணம் தராததால் தந்தையை கொலை, மகன் கைது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கல்குறிச்சி, தேவேந்தர் காலணியை சேர்ந்தவர் பொடியன்(எ) பெரியசாமி டிரைவராக பணி புரிந்து  வந்தார். இவரது மணைவி மணிமேகலை கூலிவேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன் 1 மகள் உள்ளனர். இந்நிலையில் குடிபோதை காரணமாக அடிக்கடி கணவன் மணைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்க்கு முன்பு  மீண்டும் தகராறு ஏற்பட்டு குழந்தைகளுடன்  மணிமேகலை தந்தை வீட்டிற்க்கு சென்றுள்ளார். வீட்டில் பெரியசாமி மட்டும் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வீட்டில் டிரைவர்  பெரியசாமி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ராசிபுரம் டிஎஸ்பி விஜயராகவன்  மற்றும் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் பெரியசாமியின் மகன் அஜித் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தனது தந்தையிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டதும் அவர் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அஜித் தனது தந்தை பெரியசாமியை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அஜித்தை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்ட்ரேட் உத்தரவின் பேரில் அஜித் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!