குமாரபாளையம், காவல் நிலையம் முன்பு பெண் தீக்குளித்து தற்கொலை.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த ஓலப்பாளையம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பார்வதி (46)இவர் கோவை பீளமேடு பகுதியில் ஜவுளி கடை வைத்து நடத்தி வந்தார். அப்பொழுது குமாரபாளையம் ராஜராஜன் நகர் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவருக்கும் பார்வதிக்கும் நட்பு ஏற்பட்டது. நட்பு காதலாக மாறியதால்  பார்வதி தனது கணவரை பிரிந்து ஈஸ்வரனுடன் குமாரபாளையத்தில் தனியாக வசித்து வந்தார். இதற்கிடையே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த ஆறு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பார்வதி குமாரபாளையம் காவல் நிலையத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஈஸ்வரன் தன்னை ஏமாற்றி ஆசைவார்த்தை கூறி தன்னுடன்  தனிமையில் இருந்த பொழுது அதனை ஆபாச வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, வீடியோவை பயன்படுத்தி தன்னை மிரட்டி தொடர்ந்து தன்னை பலத்காரம் செய்து வந்ததாகவும், மேலும் மிரட்டி தனது பெயரில் இந்த சொத்துக்கள் மற்றும் பணம் ஆகியவற்றை சிறுக சிறுக அபகரித்து கொண்டதாகவும் இதுவரை சுமார் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் வரை தன்னை ஏமாற்றி பறித்துக் கொண்டதாகவும், ஈஸ்வரனை கைது செய்து சொத்துக்களை மீட்டு தருமாறு புகார் அளித்திருந்தார் . புகாரை விசாரித்த போலீசார் ஈஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஈஸ்வரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தன்னை போலீசார் ஏமாற்றுகின்றனர் எனவும் கூறி பார்வதி குமாரபாளையம் காவல்நிலையம் முன்பு  தன் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதனைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் பார்வதி மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பலத்த தீக்காயமடைந்த பார்வதி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் பார்வதியின் மகன் பிரவீன்குமாரை கடந்த மூன்று தினங்களாக காணவில்லை என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தை அடுத்து தலைமறைவான ஈஸ்வரன் அவரது மனைவி மலர்கொடி சகோதரர் ஜம்பு ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!