திருச்செங்கோட்டில், பாண்டுரங்கர் திருக்கல்யாணம் உற்சவம்.

ஜேசிஐ திருச்செங்கோடு டெம்பிள் கிளை சங்கத்தின் சார்பில் நாம சங்கீர்த்தன பஜனை நிகழ்ச்சியும், தொடர்ந்து ஸ்ரீ பாண்டுரங்கர், ருக்மணி தாயார் திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது.

ஸ்ரீ விட்டல்தாஸ் மகாராஜ் தலைமையில் நடைபெற்ற நாம சங்கீர்த்தன பக்தி பஜனை நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை தொடங்கி ஞாயிற்றுக் கிழமை வரை வேலுச்சாமி முதலியார் சின்னம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றதுஸ்ரீ பாண்டுரங்கர், ஸ்ரீ ருக்மணி தேவி திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியினை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து வந்திருந்த பட்டாச்சாரியார்களால் நடத்தினர். மேளதாளம் முழங்க சிறப்பு அலங்காரத்தில் சாமி காட்சி அளித்தார். பக்தர்கள் சீர் வரிசைகள் கொண்டு வந்து திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்றனர். ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி கண்டு தரிசித்தனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!