முதியோர் பென்ஷன் கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் பென்சன் - மாதர் சங்கம் கோரிக்கை.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய பேரவை கூட்டம் எலச்சிபாளையத்தில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத்  துணைத்தலைவர் கோமதி தலைமை வகித்தார். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சாவித்திரி கலந்து கொண்டு ஒன்றிய புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி வைத்துபேசினார்

ஒன்றியத் தலைவராக சத்தியபாமா செயலாளராக கோமதி பொருளாளராக கலைச்செல்வி துணைத் தலைவராக ரஹமத் துணைச் செயலாளராக ஜெயராணி மற்றும் கமிட்டி உறுப்பினராக கண்ணகி, லட்சுமி ராஜேஸ்வரி உட்பட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் திலகவதி
கலந்து கொண்டார். கூட்டத்தில் குமாரமங்கலம் பிரிவு ரோட்டில் இரு புறமும் சாக்கடை கால்வாய் அமைத்து வேண்டும் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் , எலச்சிபாளையம் சந்தைப்பேட்டை சத்யா நகர் சின்னஎலச்சிபாளையம் பனங்காடு போன்ற பகுதிகளில் சாக்கடை கால்வாய்கள் தூர் வாரவேண்டும், எலச்சிபாளையம் பஸ் ஸ்டாப்பில் பொதுமக்களுக்கு பொது கழிப்பிட வசதியும் நிழல் கூட வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் , கடந்த நான்கு வருடமாக முதியோர் பென்ஷன் கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் பென்சன் வழங்க வேண்டும், பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் புகார் கமிட்டி அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!