பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு, நூற்பாலைகளுக்கு சமூக நலத்துறை அலுவலர் அறிவுறுத்தல்.

நாமக்கல் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் அனைத்து நூற்பாலை மேலாளர்கள் மற்றும் மனிதவள அலுவலர்களுக்கு பணியிடங்களில் பெண்களுக்கு பாலியியல் வன்முறை தடுப்பு, பாதுகாப்பு, குறைத்தீர் சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அன்பு கலந்து கொண்டு கருத்தரங்கை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது நாமக்கல் மாவட்டத்தில் 129 நூற்பாலைகள் உள்ளதாகவும், இதில் 52 ஆலைகள் மட்டுமே விசாகா கமிட்டி அமைத்து, சமூக நலத்துறையிடம் பதிவு செய்துள்ளதாகவும், மீதமுள்ள ஆலைகளும் விரைந்து இக்கமிட்டியை அமைத்திட வேண்டும் எனவும், அதே போல் மாவட்டத்தில் 47 பெண்கள் தங்கும் விடுதிகள் உள்ளதாகவும், அவைகளில் 7 மட்டுமே பதிவு செய்து கொள்ள கருத்துரு வந்துள்ளதாகவும், மீதமுள்ளவைகளும் விரைந்து பதிவு செய்திட வேண்டும் என கேட்டு கொண்டார். மேலும் 10 பெண்களுக்கு மேல் பணியாற்றும் எந்த ஒரு நிறுவனத்திலும் பெண்கள் பாதுகாப்பு உள்ளக குழுக்கள் அமைத்து அக்குழுவில் 50 சதவீதம் பெண் உறுப்பினர்கள் இடம்பெற செய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்படும் எந்த பெண்ணும் உடனடியாக புகார் அளிக்கும் வகையில் குழுக்கள் செயல்படுவதோடு பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்பாலை மற்றும் கார்மெண்ட் நிறுவனங்களை சேர்ந்த மேலாளர்கள் மற்றும் மனிதவள அலுவலர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!