கைத்தறி நெசவாளர் கணக்கெடுப்பு. பெயரை பதிவு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்.

மாவட்ட ஆட்சித்தலைவர் மு.ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

4வது தேசிய கைத்தறி கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், தற்பொழுது விடுபட்ட நெசவாளர்கள் மற்றும் நெசவு சார்ந்த உபதொழில் புரிபவர்கள் கணக்கெடுப்பில் சேர்ந்து பயன்பெற மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது என இந்திய அரசு, ஜவுளி அமைச்சகம், கைத்தறி அபிவிருத்தி ஆணையர் அலுவலகம், புதுதில்லி, நெசவாளர் சேவை மையம் மூலம் 10.09.2018 அன்று நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனவே, கைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைத்தறி நெசவு சார்ந்த உபதொழில்புரிபவர்கள் தங்கள் பெயர்கள் விடுபட்டிருந்தாலோ அல்லது விபரங்கள் முரண்பட்டிருந்தாலோ அது குறித்த விபரங்களை www.handloomcensus.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இது தொடர்பான தகவல்களை பெற அருகில் உள்ள நெசவாளர்கள் சேவை மையம், சேலம் அல்லது உதவி இயக்குநர், கைத்தறி மற்றும் துணிநூல், திருச்செங்கோடு அலுவலகத்தை தொடர்பு கொண்டு 09.10.2018-க்குள் பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!