கிராம சபா விவாத பொருள் –ஆட்சியர் வெளியீடு

மாவட்ட ஆட்சித்தலைவர் மு.ஆசியா மரியம்  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் 02.10.2018 அன்று கிராமசபா கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கீழ்க்காணும் பொருள்கள் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது.

  1. பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல்
  2. மக்கள் திட்டமிடல் இயக்கம்.
  3. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்.
  4. ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்து விவாதித்தல்.
  5. ஊராட்சியின் முந்தைய ஆண்டிற்கான ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு கணக்கின் மீதான தணிக்கை குறிப்புகள் கிராம சபைக் கூட்டத்திற்கு முன் சமர்ப்பித்தல்.
  6. குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல்.
  7. கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்.
  8. முழு சுகாதார தமிழகம்;, முன்னோடி தமிழகம்.
  9. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்.
  10. மகளிர் திட்டம்.
  11. இதர பொருட்கள்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!