உப்பூர் அனல் மின் திட்டத்திற்கு திமுகவினர் எதிர்ப்பு – அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு.

நாமக்கல் நகராட்சி, கொண்டிசெட்டிபட்டியில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் சுயசேவைபிரிவு மற்றும் கிடங்கு திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் சுயசேவைபிரிவு மற்றும் கிடங்கினை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம். தலைமை வகித்தார். நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் மூலமாக நாமக்கல் நகரில் 11 நியாயவிலை கடைகளும், திருச்செங்கோடு நகரில் 4 நியாயவிலை கடைகளும், மோகனூர் மற்றும் பரமத்திவேலூர் பகுதிகளில் 2 கூட்டுறவு மருந்தகங்களும், நாமக்கல் நகரில் உழவர்சந்தை எதிரில் 1 பொது விற்பனை பிரிவு (எழுது பொருட்கள்) அங்காடியும் செயல்பட்டு வருகின்றது. இப்பண்டகசாலை மூலமாக நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்கள் நடத்தும் அனைத்து நியாயவிலை கடைகள் மூலமாக குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த சுயசேவை பிரிவின் மூலம் இப்பகுதியிலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மளிகைப்பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி  எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழ் ஜனநாயக முறைப்படி அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது இதில் கலந்து கொள்வதும் கலந்து கொள்ளாதததும் அவர்,அவர்களுடைய விருப்பம். தற்போது தமிழகத்தில் 1 மணி நேரம் கூட மின் வெட்டு இல்லை. டாஸ்மாக் கடையில் சில்லரை விற்பனையில் பில் தொகையினை காட்டிலும் அதிமாக விற்றால் கடும் நவடிக்கை எடுக்கப்படும்.உப்பூர் அனல்  மின் திட்ட இடம் ஒதுக்கீடு தொடர்பாக வழக்கு உள்ளது இதில் திமுக உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இப்பிரச்சனை பேசி  தீர்ந்த பிறகு விரைவில் தொடங்கப்படும். ஒரிஸ்ஸாவில் இருந்து நிலக்கரி தற்போது தங்குதடை இன்றி வருகிறது. 3 நாட்களாக 16 ரேக் நிலக்கரி கொடுத்து கொண்டுள்ளனர். கையிருப்பை அதிகபடுத்த 20 ரேக்காக கேட்டு உள்ளோம்  எனத் தெரிவித்தார்.

 

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!