நாமக்கல் காதி கிராப்டில் சிறப்பு தள்ளுபடி விற்பனை-ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

                நாமக்கல் காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகை கால சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்.

                தீபாவளி விற்பனையை முன்னிட்டு பட்டு சேலைகள், கைத்தறி சேலைகள், பாலிஸ்டர், கைத்தறி வேட்டிகள், துண்டுகள், கம்பளி போர்வைகள், சோப்பு ரகங்கள் என அனைத்திற்கும் 20 முதல் 30 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.       முன்னதாக மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி அவரின் திருவுருவ படத்திற்கு ஆட்சியர் மலர் தூவி மரியாதை செலுத்தி முதல் விற்பனையை துவக்கி வைத்தார். பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்தார். பின்னர் அவர் கூறுகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் இவ்வாண்டு ரூ.67.44 லட்சம் மதிப்புள்ள கதர் ரகங்களை விற்பனை செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

 

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!