நாமக்கல் ரேசன் கடைகளில் ஆட்சியர் நேரில் ஆய்வு.

நாமக்கல் வட்டத்தில் செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடைகளில் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

     நாமக்கல் வட்டம், முதலைப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் நியாயவிலைக்கடையினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் பொருட்களின் இருப்பு, விற்பனை, மீத இருப்பு, விற்பனையான பொருட்களின் தொகை விபரங்களை எளிதில் தெரிந்து கொள்ளவும், காகித பயன்பாட்டை குறைக்கும் வகையிலும் அரசினால் வழங்கப்பட்டுள்ள அதிநவீன பாயிண்ட் சேல்ஸ் மிசினை இயக்கி அதனடிப்படையில் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய், பாமாயில் ஆகியவற்றின் இருப்பு குறித்து பார்வையிட்டு சரிபார்த்தார். இந்த ஆய்வின்போது விற்பனை செய்யப்பட்ட அனைத்து பொருட்களின் விற்பனை குறித்து, பாயிண்ட் சேல்ஸ் மிசின் பதிவுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும் சரிபார்த்தார்.

     அதனைத்தொடர்ந்து செல்லப்பம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் செயல்பட்டு வரும் பொம்மைகுட்டைமேடு நியாயவிலைக்கடை, தாழம்பாடி நியாயவிலைக்கடை மற்றும் செல்லப்பம்பட்டி நியாயவிலைக்கடை, என்.மின்னாம்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் செயல்பட்டு வரும் புதன்சந்தை நியாயவிலைக்கடை மற்றும் மின்னாம்பள்ளி நியாயவிலைக்கடை ஆகியவற்றிலும் நேரில் ஆய்வு செய்து பொருட்களின் இருப்பினை மாவட்ட வழங்கல் துறை அலுவலர்களின் துணையுடன் சரிபார்த்தார்.

     இந்த ஆய்வுகளின்போது பொதுமக்களிடம் குடிமைப்பொருட்கள் முறையாக வழங்கப்படுகின்றதா, விற்பனையாளர் சரியாக வருகின்றாரா என்றும் கேட்டறிந்தார். மேலும் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற அத்தியாவசியப் பொருட்களை மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமாகவும், எடையளவு குறையாமலும் முழுமையாக வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் விற்பனையாளர்களுக்கு உத்தரவிட்டார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!