வடகிழக்கு பருவமழை பாதிப்பு, உதவி பெற எண்கள் அறிவிப்பு

 தற்போது, தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ளதால், புயல் மற்றும் மழை ஆகியவற்றின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.  எனவே, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும், முன்னெச்சரிக்கையாக தங்கள் உடமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கோ அல்லது மாவட்ட நிர்வாகத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள நிவாரண முகாம்களிலோ சென்று தங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 மேலும். மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவை எனக் கண்டறியப்பட்ட இடங்களில் மாவட்ட அளவில் நியமனம் செய்யப்பட்டுள்ள பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள் தங்குவதற்கு வசதியாக நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, அதில். அவர்களுக்குத் தேவையான உணவு, உடை மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தினால் செய்யப்பட்டுள்ளன.

 மேலும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள், அவசர கால உதவிக்கு, மாவட்ட அவசர கால நடவடிக்கை மையம்-1077, காவல் துறை-100, தீயணைப்பு துறை-101, மருத்துவ உதவி-104, ஆம்புலன்ஸ் உதவி-108 ஆகியவற்றிற்கும் மற்றும் நாமக்கல் வட்டத்திற்கு 9445000543, இராசிபுரம் வட்டத்திற்கு 9445000544, சேந்தமங்கலம் வட்டத்திற்கு 9445461913, கொல்லிமலை வட்டத்திற்கு 9442894789, குமாரபாளையம் வட்டத்திற்கு 9942057420, திருச்செங்கோடு வட்டத்திற்கு 9445000545, பரமத்திவேலூர் வட்டத்திற்கு 9445000546,  மோகனூர்  வட்டத்திற்கு 9788410768, ஆகிய எண்களில் சம்மந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு உதவிகளை பெறலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!