கூட்டுறவு சங்கத் தலைவரை தகுதி நீக்கம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட குழுவின் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் .ஆர்.முத்துசாமி தலைமை வகித்தார். மாநிலபொருலாளர் எம்.சங்கர்,தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் .ஆதிநாராயணன்,மாவட்ட பொருளாளர் ஆர்.வேலாயுதம்,பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர்கள் சி. ரங்கசாமி பி.கே.ராமசாமி, நகரத் தலைவர் கா.மு.காளியப்பன், .தொல்காப்பியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

கீரம்பூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தனக்கு வேண்டியவர்கள் கொண்டு வரும் தரமற்ற பாலுக்கு விலை கொடுக்க முயற்சி செய்யும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கத்தில் தகுதியற்ற ஒருவரை சங்கத்தின் தலைவர் ஆனது எப்படி என விசாரணை நடத்திட வேண்டும். நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களிலும் பால் பரிசோதனை கருவிகள் அமைத்து பால் பரிசோதனை செய்து உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும்.

தமிழக அரசு பசும்பால் ஒரு லிட்டருக்கு ரூ.35 ம் எருமைப் பாலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.45 ம் விலை உயர்த்தி வழங்க வேண்டும்.பால் உற்பத்தியாளர்களுக்கு 50 சதவீத மானியத்தில் மாட்டு தீவனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!