நாமக்கல் மாவட்டத்தில் பேரிடர் மீட்பு குழு தயார்.

நாமக்கல் மாவட்டத்தில் வரவிருக்கும் பருவ மழை மற்றும் புயல், வெள்ளம் ஏற்படும் சமயங்களில் ஏற்படும் பாதிப்பிலிருந்து பொதுமக்களை மீட்பதற்கு நாமக்கல் மாவட்டத்தில் காவல்துறையில் 44 நபர்கள் அடங்கிய பேரிடம் மீட்பு குழுவினர் தயார்; நிலையில் உள்ளனர்.

பேரிடர் மீட்பு குழுவினரிடம் புயல், மழை, வெள்ளம் ஏற்படும்போது பொதுமக்களை மீட்பதற்கு தேவையான உபகரணங்களான மிதவை பலூன்கள், மிதவை உடைகள், சர்ச் லைட்டுகள், இயந்திர மர அறுப்பான்கள், முதலுதவி பெட்டிகள், அவசர காலத்தில் மருத்துவ உதவிக்காக எடுத்துச் செல்லும் தூக்கு படுக்கை உபகரணங்கள் மற்றும் தகவல் தொடர்புக்கு விஎச்எப் ரேடியோக்கள், கயிறு, மண்வெட்டி, கடப்பாறை இதர பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பேரிடர் மீட்பு படையினர் தலா 10 பேர் வீதம் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு, நான்கு உட்கோட்ட தலைமையிடத்திலும் தகுந்த உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து காவல் நிலையங்களிலும் அனைத்து துறை அலுவலர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் பேரிடம் மீட்பு கட்டுப்பாட்டறை எண்களையும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இவற்றை தவிர ஆற்றோரம் உள்ள படகு வைத்திருப்பவர்கள், நீச்சல் தெரிந்த நபர்களின் விபரங்களையும்,  சேகரித்து வைத்து தேவையான நேரங்களில் பொதுமக்களுக்கு உதவிட பேரிடர் மீட்பு குழுவுடன் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு நாமக்கல் மாவட்ட கட்டுப்பாட்டறை எண்கள் 1077, காவல்துறையில் 9498101020, 04286-280500 ஆகிய எண்களில் அவசர காலங்களில் தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!